
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழு குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்ததை அடுத்து நிமல் சிறிபால டி சில்வா அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். – NW-