
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை நான் கைது செய்வதாக சமூக ஊடகங்கள் ஊடாக பாரிய பிரச்சாரங்களை செய்ய சில குழுக்கள் முயற்சிக்கின்றன. ஆனால் அது உண்மையல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தேசியக் கொள்கையை முன்வைத்த ஜனாதிபதி, அமைதியான செயற்பாட்டாளர்களுக்கு எதிராக எந்தவிதமான பாரபட்சத்தையும் ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என்றும், அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாகவும் தெரிவித்தார்.
“அமைதியான செயற்பாட்டாளருக்கு ஏதேனும் அநீதி ஏற்பட்டால், அந்த நபர் 24 மணி நேர அர்ப்பணிப்பு தொலைபேசியை அழைத்து புகார் அளிக்கலாம். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு புகார்களை ஆய்வு செய்து, அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,” எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
- NW-