
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (LIOC) 50 புதிய எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பான விரிவான விளம்பரங்களை விரைவில் வெளியிடும் என நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.
ஒரு ட்விட்டர் செய்தியில், குப்தா நாடு முழுவதும் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை இயக்க LIOC க்கு அனுமதி வழங்கியதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். (NW)