
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் நகர சபைகளில் மாற்றங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏழு நகர சபைகள் மாநகர சபை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய நகர சபைகளே மாற்றம் பெறுகிறது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மூன்று மாகாண சபைகளை நகர சபைகளாக மாற்றுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது.
பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் வினைத்திறனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (NW)