
பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி 16 தொடக்கம் 20 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேர வேலைவாய்ப்புக்களில் ஈடுபடும் வகையிலான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் தொழில் சூழலுக்கு பழக்கப்படுத்தப்படாமை காரணமாக தொழிற் துறை பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். (CN)