
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) காவலில் இருந்த போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் STF காவலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் நவகமுவ பகுதியில் உள்ள குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை அவர் துவான் எனப்படும் பாதாள உலக உறுப்பினர் ஷிரார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கொட பிரதேச சபை உறுப்பினர் சுமுது ருக்ஷானின் கொலை உட்பட பல கொலைகளுடன் இவர் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க STF அதிகாரிகள் அழைத்துச் சென்ற போது துவான் குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (NW)