
சமூக ஊடகத் தளமான வட்ஸ்அப் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது என மெட்டா தளங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
அதன்படி, பின்வரும் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அது உள்ளடக்கும்.
-அனைவருக்கும் தெரிவிக்காமல் குழு அரட்டையிலிருந்து வெளியேறவும்,
-நீங்கள் ஒன்லைனில் இருக்கும்போது யார் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும்,
-ஒருமுறை செய்திகளைப் பார்க்கும்போது ஸ்கிரீன்ஷொட்களைத் தடுக்கவும் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
“உங்கள் செய்திகளைப் பாதுகாப்பதற்கான புதிய வழிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டே இருப்போம். அவற்றை நேருக்கு நேர் உரையாடல்களாக தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்போம்” என ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். (NW)