in ,

இன்னுமொரு குழந்தை மரணம். காரணம் இதுதான்

கொரோனா வைரஸ் காரணமாக குழந்தை ஒன்றின் மரணம் பதிவாகியுள்ளது. கம்பளை, புஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்றே வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மே 25 ஆம் தேதி பிறந்த குழந்தை, கடுமையான காய்ச்சல், வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன் போது பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு குழந்தை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சிசுவின் மரணத்துக்கான காரணம் கொவிட் நிமோனியா என சுகாதார அமைச்சு அறிவித்துள்ள நிலையில் தாயிடமிருந்து பிள்ளைக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். தாய்க்கு இதுவரை பி.சீ.ஆர். பிரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

குளியாபிடிய, வாரியபொல உட்பட 09 இடங்களில் புதிய வைரஸ் திரிபு

காலி முகத்திடல் அலங்கரிக்கப்படுகிறது