
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் பயணிகளை எச்சரித்துள்ளது.
தங்கம், சிகரெட், மருந்துகள், அலங்கார செடிகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பொருட்கள் பயணிகளால் கொண்டு வரப்படுவது அதிகரித்துள்ளதாக சுங்கத்துறை பணிப்பாளர் நாயகம் P. B. S. C. நோனிஸ் தெரிவித்தார்.
சுங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி சில பயணிகள் வர்த்தக அளவுகளில் பொருட்களை கொண்டு வருவதாகவும் நோனிஸ் கூறியுள்ளார்.
இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால், கொண்டுவரப்பட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படுவதோடு, சுங்கச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் விதிகளின்படி பறிமுதல் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். (NW)