in

சிறுமியை கடத்தியமை தொடர்பில் இருவர் கைது

லுனுகல, உடகிருவ பிரதேசத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றைய தினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து சிறுமி ஒருவரை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனுகல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சந்தேக நபர்களால் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் லுணுகல மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 53 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உடகிருவ வனப்பகுதியில் 08 நாட்களாக சிறுமியை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக லுனுகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட உள்ளார். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

16 – 20 வயதுக்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பு

35 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோல் தரையிறங்குகிறது