
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து எரிபொருள் தொகையினை தரையிறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருள் அடங்கிய கப்பலொன்று நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் ஊடாக 35 ஆயிரம் மெற்றிக் டொன் பெற்றோல் கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, மசகு எண்ணெய் அடங்கிய கப்பலொன்று நாளைய தினம் நாட்டை வந்தடையுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (CN)