
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 96 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த அனைவரும் உள்நாட்டுப் பிரஜைகள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 68 ஆயிரத்து 12 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கடந்த 13 ம் திகதி 2 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (CN)