in

பிஸ்கட்கள் விலை உயர்வு – காரணம் வெளியாகியது

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்கட் மற்றும் பிற இனிப்பு வகைகளின் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் அதிக விலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்துள்ளனர்.

டொலர் நெருக்கடிக்கு மத்தியில் உற்பத்திக்காக ‘ஏ’ தர கோதுமை மாவை இறக்குமதி செய்ததன் விளைவாக பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மே மாதம் கோதுமை மாவின் விலை ரூ. 74, தற்போது இதன் விலை ரூ. 290-300 ஆகும். “இது 277% விலை உயர்வு” என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

டொலர் நெருக்கடியின் போது தரமான கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட தொகையே தமது உற்பத்திப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தொடரப்போகும் ஆர்ப்பாட்டம் – மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

நாடு் திரும்புகிறார் கோட்டா