in

இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர் ஆதரவு

இலங்கைக்கு உதவ இந்தியா தன்னால் முடிந்ததைச் செய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் கடன் மற்றும் இடமாற்று ஏற்பாடுகள் உள்ளடங்களாக இந்தியா இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் தற்போது முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், “நாங்கள் IMF இல் இலங்கைக்கு எந்த உதவியையும் செய்ய முடியும், அதை நாங்கள் இயல்பாகவே செய்வோம்” எனவும் கருத்துத் தெரிவி்திருந்தார். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விசிட் விசாவில் வெளிநாடு செல்வோருக்கு எச்சரிக்கை

மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று மணி நேர விசாரணை