in

மைத்திரிபால சிறிசேனவிடம் மூன்று மணி நேர விசாரணை

ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியிடம் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணிநேரம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு இராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் வளாகத்தில் இவோன் ஜோன்சன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அவருக்கு 2012 இன் ஆரம்பத்தில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் கொலைக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தார்.

ரோயல் பார்க் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கைக்கு 3.8 பில்லியன் டொலர் ஆதரவு

குறைக்கப்படுகிறது முட்டையின் விலை