in ,

குளியாபிடிய, வாரியபொல உட்பட 09 இடங்களில் புதிய வைரஸ் திரிபு

ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்ட கொவிட் 19 Alpha எனும் கொரோனா வைரஸ் திரிபு இலங்கையின் 09 பகுதிகளில் பதிவாகியுள்ளது. B.1.1.7 எனும் ஐக்கிய இராச்சிய வைரஸ் திரிபு கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியாபொல ஹபராதுவ (மாத்தறை), திஸ்ஸமஹாராம, கராபிட்டிய மற்றும் ராகமவில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரியல் பிரிவின் இயக்குநர் டாக்டர் சந்திமா ஜீவந்தரா கூறுகையில், இந்திய மற்றும் இலங்கை வகை வைரஸ் திரிபுகள் இரண்டு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. வாஸ்கடுவவில் தனிமைப்படுத்தல் விடுதி ஒன்றில் இருந்து B 1.617.2, வைரஸின் இந்திய திரிபு (டெல்டா) கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை டாக்டர் சந்திமா ஜீவந்தரா கூறுகையில், கோவிட் -19 இன் இலங்கை வைரஸ் திரிபு B.1.411, திஸ்ஸமஹாராமவிலிருந்து பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தனது குழு நடத்திய ஆய்வில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இந்த கண்டுபிடிப்புகள் வெளிவந்துள்ளதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அம்பரபொல பகுதியில் உலர் உணவுப் பொதிகள் விநியோகம்

இன்னுமொரு குழந்தை மரணம். காரணம் இதுதான்