in

பாரிய உணவு நெருக்கடியை எதிர் நோக்கும் இலங்கை

நெற்பயிர்ச்செய்கை குறைவடைந்தமையால், இலங்கை பாரிய உணவு நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளதாக ஜப்பானின் டோக்கியோவைத் தளமாகக் கொண்ட ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடங்களில் சிறுபோகத்தில் இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன்னாக இருந்த அறுவடை இனிவரும் காலத்தில் பாதியாக குறைவடையும் என பேராசிரியர் புத்தி மாரம்பேவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நெல் பற்றாக்குறை, உணவுப் பாலத்தில் பாரிய இடைவெளியைத் தோற்றுவித்து, ஆரோக்கிய குறைவினை அதிகரிக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரம் மாத்திரமின்றி, எரிபொருள் சிக்கலும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசியில் தன்னிறைவு பொருளாதாரம் கொண்ட இலங்கை இன்று அரிசிக்காக ஏனைய நாடுகளை எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. (NF)

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குறைக்கப்படுகிறது முட்டையின் விலை

12 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மீது நடவடிக்கை