in

கட்டுப்பாட்டு விலைக்கு முட்டை விற்க முடியாது

அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 55 ரூபாய்க்கு கீழ் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டாம் என விவசாயிகளுக்கு சங்கம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை உற்பத்திக்கான செலவை கால்நடை அமைச்சகம் கணக்கிட்டு வழங்குகிறது என்றும் இந்த மாதத்திற்கான விலை ஒரு முட்டைக்கு 49.50. ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் சட்டத்திற்கு மாறாக முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்க முடியாது எனவும் இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை முட்டை விநியோகத்தை நிறுத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை எனவும்
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வெள்ளை முட்டைக்கு 43.00 ரூபாவும், பழுப்பு/சிவப்பு நிற முட்டைக்கு 45.00 ரூபாவும் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை – மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி, எதிர்கட்சித் தலைவருக்கிடையில் சந்திப்பு