in

இந்த வாரம் முதல் கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக் கொள்ளலாம்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு அவசரமாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு திணைக்களத்தில் சிறப்பு ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே புதிய விசேட கவுன்ட்டர் ஒன்றை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அனுமதியளித்தார்.

பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து இலங்கையர்களுக்கும் 22ம் திகதி முதல் கவுன்டர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்குவதற்கான வழமையான கோரிக்கைகள் காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த விசேட கவுன்டர் திறந்து வைக்கப்பட்டது.

இதன் மூலம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் இருந்து தமது வேலை தொடர்பான கடிதத்தைப் பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரர்கள் தமது ஆரம்பச் செயற்பாடுகளை நிறைவுசெய்து, விசேட கவுன்டரில் ஆவணத்தை வழங்குவதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

30,000 மெற்றிக் தொன் சுப்பர் டீசல் நாளை

சமன் பெரேரா கைது