in

ரோஹிதவின் ஹோட்டலுக்கு தீ வைத்தவர்கள் கைது

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவிற்கு சொந்தமான கொலன்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி கொங்கலகந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு சந்தேக நபர்கள் சொத்துக்களை திருடி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கொலன்னாவை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் திங்கட்கிழமை (22) மற்றும் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட கொலொன்னாவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொலன்னாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (NW)

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சமன் பெரேரா கைது

கொரியாவில் 1047 வேலைவாய்ப்புகள்