நாட்டில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் பல்வேறு மக்கள் ஜீவனோபாயத்துக்காக மிகப்பெரிய சிரமத்தை முகம் கொடுக்கின்றனர். இந்நிலையில் உடுநுவர பிரதேசத்துக்குற்பட்ட அம்பரபொல, ஹந்தெஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (09) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அம்பரபொல, ஹந்தெஸ்ஸ ARWS கழகம், அம்பரபொல ஜனாஸா நலன்புரிச் சங்கம் (AJWS) என்பன இணைந்தே இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தது.
அம்பரபொல பெரிய பள்ளிவாயல் நிருவாகத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 135 வீடுகளுக்கு சுமார் 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக கழகத்தின் தலைவர் B.M ரிஷாட் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த 04 வருடங்களாக இயங்கி வரும் இந்த கழகத்தினால் பல சேவைகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – ஸாமில் ஸியாத்-