in

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை?

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுவிக்கப்படுவார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகநூல் செய்தியில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தானும் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கோரியுள்ள நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 2021 இல், நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் விசேட மன்னிப்புக்காக பல முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், ரஞ்சன் ராமநாயக்க தற்போது தனது சிறைத்தண்டனையை தொடர்ந்து அனுபவித்து வருகின்ற நிலையிலேயே ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உலகின் சக்திவாய்ந்த தலைவரே ரணில்

06 மில்லியன் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்