
முதலாவது பூஸ்டர் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளாத சுமார் 6 மில்லியன் மக்கள் நாட்டில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அபாய நிலைமையினைக் கருத்திற் கொண்டு பூஸ்டர் தடுப்பூசியினை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர் சமித்த கினிகே பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். (CN)