
வங்கி நடவடிக்கைகள் காரணமாக நேற்று சுப்பர் டீசலை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒரு Auto டீசல் கப்பல் இன்று இரவு வருவதற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதோடு அதை நாளை இறக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலும், பெற்றோலும் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
டீசலை இறக்குவதில் தாமதம் ஏற்படுவதால் பெட்ரோல் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தாமதத்தை ஈடுசெய்ய CPC இரவோடு இரவாக செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (NW)