in

ரஞ்சன் விடுதலை – ஜனாதிபதி சாதகமான பதில்

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரியில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக இலங்கை நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க நேற்று மன்னிப்பு கோரியிருந்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு நிபந்தனையாக நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எந்த கருத்தையும் வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பிரதமராகிறார் கோட்டாபய ராஜபக்ஷ?

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் மேலும் உயர்கிறது