in

LoveLove

அறக்யால முஸ்லிம் மகா வித்தியாலயம் கலைத்துறையில் வரலாற்று சாதனை

-S.L. சிராஜுதீன், பிரதி அதிபர்-

குருநாகல் மாவட்டம், கிரியுள்ள கல்வி வலய அறக்யால மு. ம. வித்தியாலயம் வெளியாகிய 2021 க.பொ.த உயர் தரப் பரீட்சையில் 100% சித்தி அடைவு மட்டத்தைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அறக்யால மு. ம. வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கலைப்பிரிவு மட்டுமே தொடரப்படுகின்ற நிலையில் வருடாவருடம் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உயர் கற்கைக்காக அனுமதி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர் தரப்பரீட்சைக்கு பாடசாலையிலிருந்து 15 மாணவர்கள் தோற்றி பரீட்சை எழுதியிருந்தனர். பெறுபேறுகள் வந்த நிலையில் பரீட்சை எழுதிய 15 மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கோ, தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கோ விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். அதில் 12 பேருக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பெறுபேறு அறக்யால மு. ம. வித்தியாலய வரலாற்றில் ஒரு சாதனைப் பயணமாகும் என்பதை தான் நினைவு படுத்துவதோடு இந்த வெற்றிக்காக பாடுபட்ட பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை நிர்வாகக்குழு என சகலருக்கும் தான் நன்றி நவிழலை தெரிவிப்பதாக பாடசாலையின் அதிபர் ஜனாபா S.L.S. அரூஸியா தெரிவித்திருந்தார்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உற்பட மூவருக்குப் பிணை

அதிகரிக்கிறது கையடக்கத் தொலைபேசிகளின் விலை