in

அதிகரிக்கிறது கையடக்கத் தொலைபேசிகளின் விலை

இலங்கையில் தற்போது கையடக்க தொலைபேசி உபகரணங்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது கைத்தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமித செனரத் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

புதிய கையடக்கத் தொலைபேசிகளை பொதுமக்கள் கொள்வனவு செய்வதும் வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், எவ்வாறாயினும், உதிரி பாகங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி உபகரணங்களின் விலைகள் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளன.

450 ரூபாவுக்கு இருந்த சாதாரண ஒரு பெட்டரி தற்போதைய இறக்குமதித் தடை மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாக 1500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அறக்யால முஸ்லிம் மகா வித்தியாலயம் கலைத்துறையில் வரலாற்று சாதனை

கோழி வளர்ப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி