Dr. Dilan Ellegala, left, supervises Dr. Emmanuel Nuwas of Tanzania as he inserts a shunt in a baby with hydrocephalus. Ellegala has played a key role in training local doctors, as described in the new book A Surgeon in the Village. Early on, he trained a hospital staffer who wasn't a doctor to do brain surgery
in

வைத்தியர்களும் வெளியேறி விட்டார்கள் – வெளியாகியது தகவல்

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் குறித்த எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதாக கூறப்படுகிறது. வைத்திய சபையின் ஊடாக வெளிநாடு செல்வதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன்போது 2,200 அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனூடாக வைத்தியர்கள் நாட்டை விட்டுச் சென்றதாக தெரிவிக்க முடியாது. விசேட வைத்தியராக ஒருவர் பதிவு செய்வதற்கு முன்னர் வெளிநாட்டுப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதால் அவர்களில் அதிகமானோர் கற்றல் செயற்பாடுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசிறி குறிப்பிட்டுள்ளார்.
(DC)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

முட்டை விற்பனையில் வீழ்ச்சி

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை