
-ஷாம் மௌலானா-
உடுபந்தாவ பிரதேச செயலக பிரிவின் எதுன்கஹகொடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மடு லேன், சிறிய தீவிற்குச் செல்லும் பாலம் உடைந்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இத் தீவுக்காக ஒரேயொரு தரைவழிப் பாதை மாத்திரம் இருந்த நிலையிலேயே கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் சேதமடைந்துள்ளது.
சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பாலத்தினூடாக மட்டுமே அந்தப் பிரதேச மக்கள் தரைவழிப் பயணம் செய்வதால் அப்பிரதேச மக்கள் இந்நாட்களில் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர் எனவும் பாலத்தை மீள் திருத்தம் செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.