
-என்.எம்.அபூ ஹம்தி, நிந்தவூர்-
அக்குரணை உலமாக்கள், ஸக்காத் சபை வர்த்தகர்கள் உள்ளடங்களான குழு ஒன்று நல்லெண்ண விஜயமாக நித்தவூருக்கு விஜயம் செய்துள்ளது.
நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த இந்தக் குழு நிந்தவூர் ஸக்காத் சபை மற்றும் ஜம்இய்யத்துல் உலமாவின் பதவி தாங்குனர்களுடனான கூட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இதன் போது நிந்தவூர் ஸக்காத் சபையின் செயற்பாடுகளை கண்டறிந்ததுடன், அக்குரணை ஸக்காத் சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்குரணை ஸக்காத் சபையினால் நிந்தவூர் ஸக்காத் சபைக்கு நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.