
-ஷாம் மௌலானா-
திவுரும்பொல காஸிம் வித்தியாலய பழைய மாணவர் சங்கமும், திவுரும்பொல தேசிய விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 08 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை ஆரம்பமானது.
திவுரும்பொல காஸிம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் தும்மளசூரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சூரவீர கலந்து சிறப்பித்ததோடு பிரதேசத்தை சேர்ந்த பலர் சிறப்பதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.