in

OMGOMG AngryAngry CryCry CuteCute LOLLOL LoveLove WTFWTF

கொரியாவில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு

இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களின் தொகை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காகச் சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். இவ்வருடத்தில் இதுவரை 2 ஆயிரத்து 858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர்.

இதேவேளை இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5 ஆயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. (DC)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

3000 பேரை பலியெடுத்த தாக்குதல் – இன்றுடன் 21 ஆண்டுகள்

இலங்கையிலிருந்து விடைபெற்றார் சமந்தா பவர்