in

பானுக, வனிந்து, சாமிக தொடர்பில் பாபர் அசாமின் பார்வை – பரபரப்புத் தகவல்

துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

தசுன் ஷானக தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதிய இறுதிப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

போட்டிக்கு பின் நடைபெற்ற கிண்ணம் வழங்கும் நிகழ்வின்போது பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம், முதல் 8 ஓவர்களில் இலங்கை அணியில் ஆதிக்கம் செலுத்தியதாகவும், ஆனால் பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்க மற்றும் சாமிக கருணாரத்ன ஆகியோருக்கு இடையேயான பார்ட்னர்ஷிப், முழுப் போட்டியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

“சிறப்பான கிரிக்கெட்டை விளையாடிய இலங்கை அணிக்கு வாழ்த்துகள். முதல் எட்டு ஓவர்களுக்கு நாங்கள் அவர்களை ஆதிக்கம் செலுத்தினோம், ஆனால் ராஜபக்ச பெற்ற பார்ட்னர்ஷிப் ஆச்சரியமாக இருந்தது.

பாகிஸ்தானின் களத்தடுப்பு மோசமாக இருந்ததை தான் ஒப்புக் கொள்வதாகவும் பாபர் அசாம் ஒப்புக் கொண்டுள்ளார்.

எங்கள் திறமைக்கு ஏற்ப நாங்கள் துடுப்பாட்டம் செய்யவில்லை. நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், ஆனால் நாங்கள் 15-20 கூடுதல் ரன்களை விட்டுக் கொடுத்தோம், எங்களின் களத்தடுப்பே எமது அணியின் தோல்விக்கு காரணம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என பாபர் அஸாம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இலங்கையிலிருந்து விடைபெற்றார் சமந்தா பவர்

திவுரும்பொல வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது மஹவெவ சிக்ஸ் பிரதர்ஸ் அணி