in

திவுரும்பொல வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது மஹவெவ சிக்ஸ் பிரதர்ஸ் அணி

-ஷாம் மௌலானா-

திவுரும்பொலயில் நடைபெற்ற DNS 2022 மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டி கடந்த இரண்டு நாட்களாக திவுரும்பொல விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் முப்பத்திரண்டு அணிகள் கலந்துகொண்ட இந்த மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டத்தில் கொடதெனியாவ அணியுடன் மோதிய மஹவெவ சிக்ஸ் பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று DNS 2022 சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திவுரும்பொல மத்திய மருந்தக பிரதம வைத்தியதிகாரி சன்ஜீவனி ருவன்திகா, கிராமசேவகர் பஸ்லுர்ரிஸ்வான், மௌலவி அஹ்மத் மிஸ்பாஹி மற்றும் தொழிலதிபர் அல்ஹாஜ் சலாம் ஆகியோர் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்திருந்தனர்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

பானுக, வனிந்து, சாமிக தொடர்பில் பாபர் அசாமின் பார்வை – பரபரப்புத் தகவல்

அமுலுக்கு வரலாம் தேசிய பாதுகாப்புச் சட்டம் – அலி சப்ரி