in

கடலரிப்பை தடுக்க அணை அமைக்கும் நடவடிக்கை – காத்தான்குடியில் பணிகள் ஆரம்பம்

-B. M. பயாஸ்-

காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரைப் பகுதி தொடர்ச்சியாக கடலரிப்பால் சேதமடைந்து வருகிறது. இதன் காரணமாக அதிகமான மீனவர்களின் வாடிகள் மற்றும் கட்டிடங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் காத்தான்குடி நகர சபையும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து கடலரிப்பை தடுக்கும் அணை அமைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

சுமார் நானூறுக்கும் அதிகமான மண் மூடைகளைக் கொண்டு அணை அமைக்கும் பணி இந்நாட்களில் துரிதமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

செப்டம்பர் 19 அரச விடுமுறை தினம்

நிந்தவூர் பல்கலைக்கழகத் தெரிவு மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவம் – இணைப்பு