in

கொரியாவில் வேலை வாய்ப்பு – 850,000 ரூபாய் சம்பளம்

-ஷாம் மௌலானா-

தொழில் திறமை சான்றிதழ் ( NVQ) இன்றியும் கொரியா வில் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியுமென இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அரைத்தல், பொருத்துதல், போன்ற தொழில்களுக்கு குறித்த சான்றிதழ் அவசியமில்லை எனவும் கொரிய மொழித் தேர்ச்சி அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி தொழில்கள் மூலம் 850,000 ரூபா வரை சம்பளம் பெற முடியும்.
கொரிய தொழில்வாய்ப்புக்களை பெறுவோர் அரச வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்ளும் முறையும் காணப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்திருந்தார். (SN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நிந்தவூர் பல்கலைக்கழகத் தெரிவு மாணவர்களுக்கான விண்ணப்பப்படிவம் – இணைப்பு

கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகாவிற்கு மூன்று மாடிக்கட்டடம் – இன்று திறப்பு விழா