in

கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகாவிற்கு மூன்று மாடிக்கட்டடம் – இன்று திறப்பு விழா

-ரஈஸா ரஸ்ஸாக்-

கம்பஹா மாவட்டம், கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக் கட்டிடம் இன்றைய தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த மூன்று மாடிக்கட்டிடம் A.T.G. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இன்றைய கட்டட திறப்பு விழாவில் அல்ஹாஜ் பஸால் ஆப்தீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கட்டடத்தை பாடசாலைக்காக கையளித்திருந்தார். அத்துடன் இணைந்ததாக விஞ்ஞான ஆய்வுகூடத் தொகுதி, நூலக இட வசதி, மலசல கூடத் தொகுதி, வலைபந்தாட்டத் திடல் என்பவற்றையும் மிகச்சிறப்பாக பூரணத்துவமாக நிறை
வேற்றி மேலதிக வசதிகளாக குறித்த தனவந்தர் பெற்றுத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொரியாவில் வேலை வாய்ப்பு – 850,000 ரூபாய் சம்பளம்

புத்தளம் நகரபிதா தலைமையில் இலவச ஆயுர்வேத வைத்திய நிலையம் திறப்பு