in

புத்தளம் நகரபிதா தலைமையில் இலவச ஆயுர்வேத வைத்திய நிலையம் திறப்பு

புத்தளம் நகர சபையின் இலவச ஆயுர்வேத வைத்திய நிலையத் திறப்பு விழா இன்று செவ்வாய்கிழமை (13) நகரபிதா எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நகரபிதா உத்தியோகபூர்வமாக வைத்திய நிலையத்தை புத்தளம் சவீவபுர தாய்சேய் சிகிச்சை நிலைய வளாகத்தில் திறந்து வைத்தார்.

நிகழ்வின் கௌரவ அதிதியாக வடமேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்கள ஆணையாளர் வைத்தியர் அனுர செனவிரத்ன கலந்து கொண்டார்.

வைத்தியர் அனுர செனவிரத்ன உரையாற்றுகையில் நகரசபையின் இவ்வாறான முயற்சியை பாராட்டிப் பேசியதுடன் மாநகர சபையாக தரமுயரும்போது மேலும் பல அனுகூலங்கள் கிடைக்கப்பெறுமெனவும் அதற்காக தனது ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

நகரபிதா உரையாற்றுகையில் மறைந்த தலைவர் மர்ஹும் கே.ஏ. பாயிஸ் அவர்களே இத்திட்டத்தின் ஆரம்பகர்த்தா எனக் குறிப்பிட்டதுடன் அன்னார் விட்டுச் சென்ற பணிகளையும் இணைத்தே தமது செயற்திட்டங்களை தொடர்ந்தும் தமது பதவிக்காலத்தில் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

மாநகரசபை அந்தஸ்தைப் பெறுவதினால் எமது நகராட்சி மன்றத்திற்கு கிடைக்கவுள்ள சாதக நிலைமைகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்கள் அங்கு குறிப்பிடுகையில் மக்கள் செறிவாக வாழும் எமது பகுதிகளில் இத்திட்டம் மிகுந்த பயன்பாடுமிக்க செயற்பாடாகும் எனக் குறிப்பிட்டதுடன் நகரபிதாவுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

வைத்தியர் முனவ்வர் இவ்வைத்திய நிலையத்தின் மக்களுக்கான பயன்கள் மற்றும் செயற்திட்டங்கள் பற்றி குறிப்பிட்டதுடன், ஆணையாளரிடம் மத்திய ஆயுர்வேத வைத்தியசாலையை தரமுயர்த்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் ரனீஸ் பதூர்தீன், பர்வின் ராஜா ஜௌபர் மரைக்கார், விஜேதாச மொஹான், துமிந்த பேர்னாட் ராஜபக்ஷ, ஜெமீனா இல்யாஸ் புத்தளம் தள வைத்தியசாலை பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் அருள்தாசன், வைத்திய அதிகாரிகள், அதிபர்கள் உட்பட ஏனைய கௌரவ அதிதிகளும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தேவையுடையோருக்கான இலவச மருத்துவ பரிசோதனைகளும் வைத்திய குழாமினால் நடாத்தப்பட்டன.

இதேவேளை நகர சபையினால் ஆயுர்வேத மருத்துவ மூலிகை உற்பத்தி செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை நகரபிதா ஆணையாளருக்குக் காண்பித்தார்.

குறித்த இடத்தை பல்வகை அம்சங்களுடன்கூடிய AYURWEDIC ZONE ஆக மாற்றுவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நகரசபை உறுப்பினர்கள் ரனீஸ் பதூர்தீன், விஜேதாச மற்றும் வைத்தியர் குழுவினரும் உடனிருந்தனர்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கஹடோவிட்ட முஸ்லிம் பாலிகாவிற்கு மூன்று மாடிக்கட்டடம் – இன்று திறப்பு விழா

14. 09.2022 மின் வெட்டு நேர அட்டவணை