
-என்.எம்.அபூ ஹம்தி(நிந்தவூர்)-
சர்வதேச சிறுவர் தினம் 2022 ஐ சிறப்பித்து “சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்” எனும் கருப்பொருளில் நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை 14 ம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வு நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் சட்டத்தரணி A.M. அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது சிறார்களுக்கு சித்திரம் வரையும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்வின் ஆரம்ப பிரிவு சிறார்கள் 24 பேர்கள் ‘அழகு வீடு’ என்ற சித்திரத்தினை வரைவதற்காக ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.