
குருநாகல் மாவட்டம், நிகவரடிய முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
2022/2023 ஆம் ஆண்டுக்கான மாணவத் தலைவர்களே தெரிவு செய்யப்பட்டு சின்னம் அணிவிக்கப்பட்டது. பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள் , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.