
-B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)-
கோறளைப்பற்று மத்திய மற்றும் வாழைச்சேனை இளைஞர் கழக சம்மேளனம், கோறளைப்பற்று மத்திய வாழைச்சேனை பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாமொன்று
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (14) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் தலைமையில் இடம்பெற்ற இவ்விரத்ததான முகாமில் அரச உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆண்கள், பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர்.
இதில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் திருமதி.ஜே.கலாராணி, மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி.நிஷாந்தி அருள்மொழி, கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் அப்துல் ஹமீட், கிராம உத்தியோகத்தர்களான இஸட் எம்.றிகாஸ், எஸ்.எம்.சஜ்மி, ஆர்.எம்.றம்ளான், ஏ.எம்.அன்வர் சதாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.






