in

புத்தளம் கடற்கரைப் பூங்காவில் இனி களியாட்ட நிகழ்வுகள் இல்லை

நேற்று (15) புத்தளம் நகர சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களின் தலைமையில் நகர சபையின் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

புத்தளத்தைச் சேர்ந்த சதாம் திக்ரான் ஷர்ஜஹான் சகோதரருக்கு International Youth Council அமைப்பில் Chief Executive Director எனும் உயர் பதவி கிடைத்திருக்கின்றமை புத்தளம் மண்ணுக்கும் நாட்டுக்கும் கிடைத்த பெரும் கௌரவமாகும்.

அவர்களை கௌவிக்கும் முகமாக சபையில் வைத்து நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

மேலும் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில:

புத்தளம் கொழும்பு முகத்திடல் கடற்கரைப் பூங்காவில் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியின் பின் எவ்வித கார்னிவல் களியாட்ட நிகழ்வு மற்றும் இசை கச்சேரி நிகழ்வுகள் எதற்கும் இடம் வழங்கப்பட மாட்டாது.வாக்கெடுப்பு மூலம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நகரசபையின் இலவச ஆயுர்வேத மூலிகை உற்பத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அபிவிருத்தி செய்து அதனை பல்வகை ஆயுர்வேத வேலைத்திட்டங்களைக்கொண்ட மையமாகவும் சுற்றுலாப் பயணிகளை கவரும் தளமாகவும் அபிவிருத்தி செய்தல். இதன் மூலம் சபைக்கும் நாட்டுக்கும் வருமானம் பெற்றுக் கொள்ளல்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாசகர்களுக்கு நகரசபை பொதுசன நூலகத்தில் இலவச அங்கத்துவத்தை வழங்குதல் போன்ற தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஒரு இலட்சம் பனம் விதைகள் நடும் திட்டம் – வாகரையில் ஆரம்பம்

இடமாற்றம் பெறுகிறார் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர்