in

சுகாதார தொழிற்சங்கங்கள் சில இணைந்து 04 மணி நேர வேலை நிறுத்தம்

சுகாதார தொழிற்சங்கங்கள் சில இணைந்து இன்றைய தினம் 04 மணி நேர வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனை உட்பட 42 மருத்துவமனைகளில் ஐந்து சுகாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குதல், கொவிட் கடமைகளில் ஈடுபடும் சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குதல், மற்றும் கொவிட் தடுப்பூசிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைத்தல் போன்ற கோரிக்கைகள் இந்த கோரிக்கைகளில் உள்ளடங்குகின்றன. இதேவேளை வேலை நிறுத்த நடவடிக்கை காரணமாக COVID-19 சோதனையின் மாதிரி சேகரிப்பு நடைமுறையில் உள்ள சிரமங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எடுத்துரைத்துள்ளது. இந்நிலையில் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க மாற்றுத் தீர்வாக கொவிட் சோதனை நடைமுறைக்கு பங்களிக்க பொது சுகாதார சேவைகளின் பிற பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய GMOA சுகாதார அமைச்சகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு ஜப்பானிலிருந்து சாதகமான பதில்

தரவுகளை மதிப்பாய்வு செய்த பின்னரே பயணத்தடை தொடர்பில் தீர்மானம்