in

இடமாற்றம் பெறுகிறார் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர்

-B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)-

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை அதிபர் எம்.சி. ஜுனைட் அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியாக இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு அவருக்கு கலாசாலையில் பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உப அதிபர் கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா பிரதி அதிபர் செல்வி சி.மொறின் உட்பட விரிவுரையாளர்கள், நிருவாக அதிகாரிகள், ஆசிரிய கலாசாலையின் ஆரம்பக் கல்வித்துறை, சமூக விஞ்ஞானத்துறை, முதல்மொழி, ஆங்கிலத்துறை, விஞ்ஞானத்துறை உள்ளிட்ட அனைத்து ஆசிரிய மாணவர்களும் கலந்து கொண்டு மாற்றலாகிச் செல்லும் அதிபர் ஜுனைட்டை வாழ்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் இடமாற்றலாகிச் செல்லும் கலாசாலை அதிபருக்கு பொன்னாடை போர்த்தி, பூ மாலைகள் அணிவித்து, நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

புத்தளம் கடற்கரைப் பூங்காவில் இனி களியாட்ட நிகழ்வுகள் இல்லை

முதல் நாளிலேயே ஒரு மில்லியனுக்கு மேல் வருமானம்