
-B.M.பயாஸ்(ஊடகவியலாளர்)-
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புனித மிக்கேல் மற்றும் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் ஆரம்பப் பிரிவுகளின் மாணவர்களது மாதிரி சந்தை நேற்று இடம்பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு பொருட்களின் விலை மற்றும் பணத்தின் பெறுமதியை கற்பிப்பதை நோக்கமாக கொண்டு குறித்த சந்தை நடாத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களின் சந்தையில் பலசரக்குப் பொருட்கள், மரக்கறி வகைகள், உணவுப் பொருட்கள் மற்றும் பழவகைகள் என பல்வேறு வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் விற்பனையும் இடம்பெற்றிருந்தது.
சந்தையில் பெருமளவான ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு தமக்குத் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் கொள்வனவு செய்திருந்ததுடன், சிறார்கள் ஆர்வத்துடன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



