Local News

மல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனாவின் 600 வது மாணவர் மன்றம்

-ஷாம் மௌலானா-

மாயிவெல, மல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனா அரபுக் கலாசாலையின் 600 வது மாணவர் மன்றத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக நடாத்தப்பட்ட இஸ்லாமிய கலை, கலாசார, விளையாட்டு மற்றும் கண்காட்சி போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 18/09/2022 நடைபெற்றது.

அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிறுவனத்தலைவரும் அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளருமான அல் ஷேக் அப்துன் நாசர் ரஹ்மானி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நான்கு இல்லங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் ரய்யான் இல்லம் சாம்பியன் ஆனது. பிர்தௌஸ் இல்லம்,
நயீம் இல்லம், அத்தன் இல்லம் ஆகியன முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களைப் பெற்றிருந்தது. நிகழ்வில் உஸ்தாத்மார்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button