
உடன் அமுலுக்கு வரும் வகையில் தீன்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது.
LCMA தலைவர் அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தீன்பண்டப் பொருட்களின் விலைகள் குறைவதை நுகர்வோர் காண்பார்கள் என்று சூரியகுமார கூறினார்.
இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால், சந்தையில் தீன்பண்டங்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சூரியகுமார தெரிவித்தார்.
தீன்பண்ட உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் சீனி கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெயின் விலை கிலோவிற்கு சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். (NW)