
-சயிக் அஸீம்-
ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தின் எண்ணக்கருக்கு இணங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மகிழ்ச்சி முகாம்” இன்று (2022.09.21.) தியத்தலாவை, கஹகொல்ல அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
தரம் 1-5 மாணவர்களை இணைத்து கொண்டு இந்த முகாம் நடாத்தப்பட்டது. பாடசாலை மாணவர்களின் திறன் விருத்தி மற்றும் மகிழ்ச்சியான கல்விச் சூழலை உருவாக்கும் நோக்கிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.