
நாட்டில் 9 வீதமான விசேட வைத்தியர்கள் இந்த வருட இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்கள் குழுவொன்று ஒரேயடியாக ஓய்வு பெறுவதனால் சுகாதாரத்துறையின் முகாமைத்துவம் மற்றும் சேவைகளை வழங்குவதில் சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேவேளை இந்த நடவடிக்கையானது இளம் மருத்துவர்களுக்கு சாதகமான பின்னணியை உருவாக்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களின் பாடப் பகுதிக்கு ஏற்ப காணப்படும் வெற்றிடங்களை சமநிலைப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (CN)