ஜப்பானில் இருந்து Oxford AstraZeneca தடுப்பூசி 600,000 டோஸ் கொள்வனவு செய்து வைத்திருக்க இலங்கை ஜனாதிபதி கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கோரிக்கையை ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகாவிடம் முன் வைத்து அதற்கு சாதகமான பதிலும் கிடைத்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் இருந்தே குறித்த தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் திடீரென பரவிய கொரோனா வைரஸ் பரவல், அந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட தீப் பரவல் போன்ற காரணங்களால் அந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ச்சியாக Oxford AstraZeneca தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் ஏறக்குறைய 1 மில்லியன் மக்கள் குறித்த Oxford AstraZeneca முதல் தடுப்பூசியை ஜனவரி 2021 பெற்றுள்ள நிலையில் குறித்த இரண்டாவது தடுப்பூசி அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (NW)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close